Kaasu Maalai
காசு மாலை மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம் போல் இருந்தது. மொஸைக் தரை, மற்றும் சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும் மரணத்தின் ஓலமோ, துக்கப்பட்டுப் பீறிட்டு வரும் அலறலோ இல்லாமல் அந்த மின்மயானம் அமைதியாக இருந்தது. சீருடை அணிந்த சில ஊழியர்களின் மெளனம் சார்ந்த அசைவுகளும், சிறுசிறு பேச்சுக்களுமே அந்த இடத்தில் நிரம்பி இருந்தது. கனமான துக்கம் அந்த அமைதியில் தெரிந்தது! வாழ்வின் கடைசி யாத்திரைக்கு வருபவர்களுக்கு
Read More...