Kaasu Maalai

Stories

Kaasu Maalai

காசு மாலை மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம் போல் இருந்தது.  மொஸைக் தரை, மற்றும் சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது.  பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும் மரணத்தின் ஓலமோ, துக்கப்பட்டுப் பீறிட்டு வரும் அலறலோ இல்லாமல் அந்த மின்மயானம் அமைதியாக இருந்தது.  சீருடை அணிந்த சில ஊழியர்களின் மெளனம் சார்ந்த அசைவுகளும், சிறுசிறு பேச்சுக்களுமே அந்த இடத்தில் நிரம்பி இருந்தது. கனமான துக்கம் அந்த அமைதியில் தெரிந்தது!  வாழ்வின் கடைசி யாத்திரைக்கு வருபவர்களுக்கு

Read More...

Ammulu

அம்முலு ரகுவை அவசர அவசரமாகக் குளிப்பாட்டினாள் ரேணு. மணி எட்டு ஆகப் பத்து நிமிடங்களே இருந்தன. மூன்றரை வயது கூட ஆகாத ரகுவை, பஹ்ரைனில் உள்ள இந்தியன் ஸ்கூலில் சேர்க்கும் முன்பாக, ப்ரீ-நர்ஸரி பள்ளியில் சேர்த்து, நாலு குழந்தைகளுடன் பழகவிடப் பிளான் பண்ணியிருந்தார்கள் ரேணுவும், பாஸ்கரும். நல்ல வேளையாக அவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்திலேயே இருந்தது மிஸஸ் செளத்ரியின் நர்ஸரி ஸ்கூல். மிகவும் :.ப்ரெண்ட்லியாகப் பேசி, முதல் நாளே ரகுவுக்குப் பிடிக்கும் விதத்தில் அவளும் நடந்து கொண்டு

Read More...

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் சாரதா கலைக் கல்லூரி களை கட்டி இருந்தது. பேராசிரியர் நல்லகண்ணுவின் முப்பத்தியேழு ஆண்டு சேவை நிறைவடைந்து பிரிவுபசார விழா! அத்தோடு, அரசாங்கம் ‘நல்லாசிரியர்’ விருது அளித்து அவரைப் பாராட்டி, கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமை ஏற்று உரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பேராசிரியரின் பேட்டி தொடங்கியது. ‘சார்! தங்களின் அனுபவம்….விடைபெறும் இத்தருணத்தில், எப்படி உணர்கிறீர்கள்’? ‘முதலில், இந்த எளியவனின் சிறிய சேவைக்கு இடமளித்த சாரதா கலைக்கல்லூரிக்கு எனது நன்றி! இக்கல்லூரியில் படித்தவர்கள் அனேகம் பேர்,

Read More...

வானதி

வானதி “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.” – அப்பாவின் கடிதம், கனகாவை உறைய வைத்திருந்தது. அப்பாவிற்கு, அம்மா ஒரு கண் என்றால், அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்த வாடாமலர் மாத இதழ் மற்றொரு கண்ணாக இருந்தது. நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வாடாமலர்,

Read More...

இடப்பெயர்ச்சி

மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது. சீதம்மாவுக்குக் குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது……..கம்பளியால் உடம்பைப் போர்த்திக் கொண்டாள். முற்றத்தில் காய வைத்திருந்த அரிசி வடகத்தை, அவசர அவசரமாகக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டு முத்துமணி வருவது தெரிந்தது. சன்னமாக ஆரம்பித்த தூறல் சடசடவென்று வலுத்ததில் முத்துமணி ஏகத்துக்கும் நனைந்து போயிருந்தாள். ‘சே…என்ன மழையோ இது! இப்படி நேரங்கெட்ட நேரத்தில் பெய்து உசிரை வாங்கிறது… இன்னும் சமைச்ச பாடில்லை; வாசுப்பயலுக்கு ஸ்கூல்விட்டு வரும் போதே அகோரப் பசி எடுக்கும்…..’அம்மா…சாதம்’ என்று

Read More...

மாசிப் பிறை

“டான்ஸுப் பாப்பா..டான்ஸுப் பாப்பா கோபங் கொள்ளாதே..உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே” — தெருமுனையில் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட்டால், அலமி ஆச்சி வந்து கொண்டிருப்பதாக அர்த்தம். ஒ! இன்று திங்கட்கிழமை!  ஒவ்வொரு வாரமும் இப்படிப் பாடிக்கொண்டு, அட்ரஸ் புத்தகமும், ஏரோகிராமுமாக ஆச்சி வந்துவிடுவாள்.  சிங்கப்பூரில் இருக்கும் ஆச்சியின் கணவர் ராமநாதன் செட்டியாருக்கு வாரம் தவறாமல் ஒரு கடிதம் எழுதிவிடுவது என்பது ஆச்சியின் தலையாய கடமையாகும்! ஆச்சிக்கு லெட்டர் எழுதும் வேலையைக் கர்ம சிரத்தையாக சாவித்திரி தான்

Read More...

விதைகள்

டேபிள் விரிப்பைச் சரி செய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பி, கோப்பைகள், தட்டுக்கள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா.  இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டிப் பார்ட்டி.  துளசியின் திருமணம், அதை ஒட்டிய இந்தியப் பயணம் என்று நாட்கள் போனதில், இன்று தான் நேரம் கிடைத்துத் தோழிகளை அழைத்திருந்தாள்.  வருபவர்கள் எல்லோரும் லேடீஸ் என்பதால், அவள் கணவன் அருணும் தனது நண்பர்களோடு டென்னிஸ் விளையாடப் போய் விட்டான்.

Read More...

Miles to go…..

‘Hey! What’s your name?’ ‘hm,,,hm… Mahalakshmi’. ‘ha..ha..ha..did I ask your grandma’s name?  tell your name along with your surname…’ ‘Mahalakshmi Muraleedhar Dhikshith’…. ‘oho ho ho….the senior girls’ loud laughter almost hit the compound walls of that college. ‘ok..ok.  now we all feel  that it is just not enough that you said one time…so say your

Read More...