இளமை

இளமை

சிலுசிலுசிலுசிலுசிலுசிலு வென்றே தென்றல் வீசிவரும்!

குளுகுளுகுளுகுளுகுளுகுளு வென்றே நிலவும் ஒளிசிந்தும்!

கலகலகலகலகலகல வென்றே கொடிகள் அசைந்தாடும்!

கமகமகமகமகமகம வென்றே மலர்கள் மணம்வீசும்!

கடகடகடகடகடகட வென்றே கார்முகில் உருண்டோடும்!

சடசடசடசடசடசட வென்றே சாரலும் மழையாகும்!

மளமளமளமளமளமள வென்றே அருவியில் நீர்வீழும்!

குமுகுமுகுமுகுமுகுமுகுமு வென்றே கடலில் அலைமோதும்!

கலகலகலகலகலகல வென்றே கைவளை ஓசையிடும்!

தளதளதளதளதளதள வென்றே மேனியும் தகதகக்கும்!

பளபளபளபளபளபள வென்றே புன்னகை பூத்துவரும்!

ஜிலுஜிலுஜிலுஜிலுஜிலுஜிலு நகையும் மெய்யில் மெருகூட்டும்!

செவ்வரியோடும் கண்களில்புதிய நாணம் குடைவிரிக்கும்!

கொவ்வைக்கனியிதழ் கொஞ்சுமொழியினைக் கொட்டித் தேன்சிந்தும்!

யெளவனம்தன்னில் மின்னல்வெட்டென மாற்றம் புகுந்துவிதும்!

இவ்விதமாக இன்னிசைமழையாய் இளமை தாலாட்டும்!

திருத்தமான முகத்தில்முறுக்கு மீசையும் துதுடிக்கும்!

திரண்டதோளும் திண்ணியமார்பும் வீரம்காட்டிவிடும்!

மூங்கிலனையக் கைகாலிரண்டும் ஆண்மையைப் பறைசாற்றும்!

ஆங்கொரு ஆடவர் அகமகிழ்ந்திடவே இளமை கொப்புளிக்கும்!

ஆநிரை புள்ளினம் தாவரம்தன்னிலும் இளமை தலைகாத்தும்!

மானிடர்மங்கையர் வளர்பருவத்தே இளமை மயக்கம்தரும்!

உயிரினம்யாவும் உணர்வுறும்போது இளமை செயலாற்றும்!

இயற்கைவழங்கும் கொடையென இளமை என்றும் இனிமைதரும்!!

ஆக்கம்:

பானுரவி/சிங்கப்பூர்