About Me

About Me

Knowing me.... knowing you...

பானு என்ற நான்

பவித்திரத்தைத் தாயாராய்க்

கவித்துவத்தைத்  தந்தையுமாய்ப்

புவித்துணையாய்ப் பெற்றோராய்ப்

புண்ணியத்தாள் பெற்றவள் நான்!

அரைடசனாய்ப் பெண்மகவும்

அதிற்பாதி ஆண்மகவும்

நிறைவளித்த பெருமக்கள்

நெறியளித்த குருமார்கள்

காதற்பதி இரவித்துணையன்

கனிந்த ஜயந்த் பரத் ப்ரீத்தி

ஆதவனாய் அருள்மதியாய்

அருளொளியாய் குலமிலங்கும்!

கவிதைஎன துயிர்மூச்சு!

கதைபுகலல் உணர்வீச்சு!

புவியிலெவர் ஆனாலும்

புண்ணியரே எனும்நோக்கு!

வலைவிரித்து எனதுமொழி

வடிவளித்தேன்! பாருங்கள்!

விலைஎமக்கு உமதன்பு!

விமரிசனம் தாருங்கள்!